தமிழ்நாடு செய்திகள்

பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் - விஜய்

Published On 2025-01-20 12:54 IST   |   Update On 2025-01-20 12:54:00 IST
  • உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு உங்களை சந்திக்க வந்தேன்.
  • ஓட்டு அரசியலுக்காக இயற்கை வள பாதுகாப்பு பற்றி நான் பேசவில்லை.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது:

* உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு உங்களை சந்திக்க வந்தேன்.

* கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் குறித்து சிறுவன் ராகுல் பேசியதை கேட்டு மனம் ஏதோ செய்தது. சிறுவன் ராகுல் பேசியதை கேட்டு பரந்தூர் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.

* பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருக்கு எனது முழு ஆதரவு உண்டு.

* நாட்டிற்கு முக்கியமான உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு தான் என் பயணத்தை தொடங்குகிறேன்.

* ஓட்டு அரசியலுக்காக இயற்கை வள பாதுகாப்பு பற்றி நான் பேசவில்லை.

* பரந்தூரில் 1000-க்கும் ஏக்கர் பரப்பளவில் நீர்நிலைகளை அழித்து சென்னையை வெள்ளக்காடாக்கும் திட்டத்தை கைவிடுக.

* விவசாயத்திற்கு எதிரான திட்டத்தில் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன் என்று பேசினார்.

Tags:    

Similar News