தமிழ்நாடு செய்திகள்

தாமரை தண்ணீரில் மலரும்: கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய் தனது கொள்கையை கூறவில்லை - தமிழிசை

Published On 2025-08-21 21:48 IST   |   Update On 2025-08-21 21:48:00 IST
  • தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? என விஜய் கேள்வி
  • தாமரை இலையில் தண்ணீர் ஒட்டத்தேவையில்லை, தாமரை தண்ணீரில் வளரும் என தமிழிசை பதில்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெற்றது.

மாநாட்டில் பேசிய விஜய், "தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? மாண்புமிகு பிரதமர் நரேந்திரடி மோடி ஜி அவர்களே, 3ஆவது முறையாக மத்திய அரசின் அதிகாரத்தை நீங்கள்தானே கையில் வைத்துள்ளீர்கள். ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா?. இஸ்லாமிய நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் சதி செய்யவா?

மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. மக்கள் சார்பாக உள்ளிடம் சில கேள்விகள் கேட்கனும் பிரைம் மினிஸ்டர் அவர்களே..! மீனவர்களை பாதுகாப்பதற்காக கட்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்குக்கொடுங்கள். அதுபோதும்.

மொரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு. நீட் தேர்வால் இங்கே நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அதனால் நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்து விடுங்கள் அது போதும். செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே?" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமரை விஜய் விமர்சித்தது குறித்து செய்தியர்களிடம் பேசிய தமிழிசை, "பிரதமரை இவ்வளவு காட்டமாக விமர்சிக்க விஜய்க்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. பிரதமர் எதுவும் செய்யவில்லை என்கிறார். இன்று இந்த நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு பிரதமர் தான் காரணம். தீவிரவாதிகளை அவர் ஒழித்தார் என்று உலகமே பாராட்டுகிறது.

கச்சத்தீவை பற்றி பேசும் விஜய் அதை யார் தாரை வார்த்தார் என்று பேசவில்லை. பாரதிய ஜனதாவை விமர்சிக்கும் விஜய் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்காதது ஏன்? விஜய் வாய்க்கு வந்ததை பேசுகிறார். கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய் தனது கொள்கையை கூறவில்லை

பிரதமரை இவ்வளவு காட்டமாக விமர்சிக்க அவசியமே இல்ல. மக்களை Please செய்ய வேண்டும்; Greece வைத்து தடுக்கக்கூடாது.

ஆபரேஷன் சிந்தூர நடவடிக்கையை பற்றி இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் ராணுவ அதிகாரி தான் நாட்டிற்கே கூறினார். இஸ்லாமிய பெண்கள் ராணுவத்தில் இருப்பதை அடையாளம் கண்டு அதனை அவர்களை நாட்டுக்கு சொல்ல வைத்தவர்.

தாமரை இலையில் தண்ணீர் ஒட்டத்தேவையில்லை, தாமரை தண்ணீரில் வளரும். தாமரை தண்ணீரில் மலரும் என்றாவது விஜய்க்கு தெரியுமா?" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News