கரூர் செல்லும் விஜய்?: த.வெ.க.-விற்கு டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தல்
- தேவையான பாதுகாப்பு குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- கரூர் மாவட்ட காவல்துறைக்கு விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் கரூர் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நேரில் ஆறுதல் கூற த.வெ.க. தலைவர் விஜய் செல்ல உள்ளார். கரூர் செல்லும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க.வினர் இன்று மனு அளித்தனர்.
ஏற்கனவே நேற்று மெயில் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டனறக.
இந்நிலையில், கரூர் செல்வதற்கு அனுமி கேட்டு தவெக சார்பில் டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் அனுப்பட்டட நிலையில், டிஜிபி அலுவலகத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தவெக சார்பில் ஒரு பிரதிநிதியை நியமித்து கரூர் எஸ்.பி-ஐ தொடர்பு கொள்ள டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
கரூர் செல்லும் தேதி, நேரம், இடம் வரும் வழிபோன்ற விவரங்களை கரூர் மாவட்ட காவல்துறைக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் போலீசுக்கு விவரங்கள் அளித்தவுடன் தேவையான பாதுகாப்பு குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.