தமிழ்நாடு செய்திகள்

மத்திய அரசு, விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன்

Published On 2025-02-23 13:12 IST   |   Update On 2025-02-23 13:12:00 IST
  • மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான்.
  • மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வருகை தந்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அரசு இருமொழி கொள்கையை கடைபிடிப்பது என்பது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வந்த பிறகு நடைபெறவில்லை. காமராஜர், அண்ணா காலங்களில் இருந்து தற்போது வரை இருமொழி கொள்ளை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மத்திய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை திணிக்கவும், இந்தி பேசுகிற மாநிலங்களில் சமஸ்கிருத்தை திணிக்கவும் மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைக்கிறது. மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான். எனவே, மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி கொடுத்துவிட்டு, கேரளா மற்றும் தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்காதது பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களை தண்டிப்பது போன்றதாகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக உள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய்க்கு, மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது எதற்கு? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News