தமிழ்நாடு செய்திகள்
வேலூரில் காலை 105 டிகிரி வெயில்.. இரவில் கொட்டித் தீர்க்கும் மழை
- வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில் மழை.
- வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, வேலூர், கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
வேலூரில் 105.1 டிகிரி, திருச்சியில் 102 டிகிரி, திருத்தணியில் 102 டிகிரி, சென்னையில் 101 டிகிரி, கரூர், மதுரை, தஞ்சாவூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்துள்ளது.
வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
வேலூர் மாநகரில் சத்துவாச்சாரி, வள்ளலார், காட்பாடி, திருவலம், கொணவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால், மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.