தமிழ்நாடு செய்திகள்
உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
- காவலர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொன்ற வழக்கு.
- தேனி மாவட்டம் கம்பம் அருகே தலைமறைவாக இருந்த ரவுடி பொன்வண்ணனை சுட்ட போலீசார்.
மதுரை உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மீது போலீசார் என்கவுண்ட்டர் நடத்தினர்.
காவலர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாராரி பொன்வண்ணன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
இதில், படுகாயமடைந்த பொன்வண்ணனை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, பொன்வண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொன்வண்ணன் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.