தமிழ்நாடு செய்திகள்
null

உதயநிநி தேர்தலில் நின்று ஜெயித்தவர், அதை எப்படி நாம் குறை சொல்ல முடியும் - டிடிவி தினகரன்

Published On 2024-12-07 18:49 IST   |   Update On 2024-12-07 22:00:00 IST
  • பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது என்று ஆதவ் அர்ஜூனன் தெரிவித்தார்
  • தேர்தலி்ல் மக்களை சந்தித்து வெற்றி பெறுபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என சொல்ல முடியாது.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டார்.

அந்நிகழ்வில் பேசிய அவர், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும் அந்நிகழ்வில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை. 2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று கோவையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், "உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆகி ஜெயிச்சுதானே வந்தாரு, அதை எப்படி நாம் குறை சொல்ல முடியும். தேர்தலி்ல் மக்களை சந்தித்து வெற்றி பெறுபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என சொல்ல முடியாது. எல்லா கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொல்வது வழக்கமானது தான். இதை ஆணவம் என்று சொல்வது சரியாக இருக்காது. இதனால் நான் திமுகவிற்கு ஆதரவாக பேசுகின்றேன் என நினைக்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News