தமிழ்நாடு செய்திகள்

தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர்- பெரும்பிடுகு முத்தரையருக்கு விஜய் புகழாரம்

Published On 2025-05-23 10:12 IST   |   Update On 2025-05-23 10:12:00 IST
  • தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள்.
  • தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம்.

சென்னை :

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள். அக்காலத்தில், தன்னுடைய போர்த்திற வெற்றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து, போருக்குச் செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர் மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள். தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர்.

அரசர்களுக்கு எல்லாம் பேரரசராகத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாளில், தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News