'தற்போது பாஜகவின் அடிமையாகிவிட்டார் இபிஎஸ்' - பொன்முடி!
- கல்வி வளர்ச்சிக்காக உண்மையில் உழைத்து கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்
- மடிக்கணினிகள் கொடுப்பது கல்வி வளர்ச்சிக்காக.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, இலவச மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தலையொட்டிதான் மிதிவண்டிகள், மடிக்கணினிகள் கொடுக்க அரசு முன்வந்துள்ளது' என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்தார். இதுதொடர்பாக பேசிய அவர்,
"அவருக்குதான் எப்போதுமே பயம். அவர் இனி வரவே முடியாது என்பதை அவரே முடிவு செய்துவிட்டார். தற்போது பாஜகவின் அடிமையாகிவிட்டார். அவர் எது வேண்டுமானாலும் கூறுவார். ஆனால் கல்வி வளர்ச்சிக்காக உண்மையில் உழைத்து கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். மடிக்கணினிகள் கொடுப்பது கல்வி வளர்ச்சிக்காக.
படிக்கின்ற மாணவர்கள் இந்த காலக்கட்டத்திலேயே அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட திட்டங்கள். அதை யார் வேண்டுமானாலும் குறை கூறட்டும். அதும் அவர் சொல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. மக்கள் அவரை புறக்கணித்து விட்டனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் செய்துள்ள சாதனைகளை மக்கள் அறிவார்கள். அதனால் அவரது பேச்சு எப்போதும் எடுபடாது." என தெரிவித்தார்.