தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம்- த.வெ.க கூட்டத்தில் தீர்மானம்

Published On 2025-12-11 15:50 IST   |   Update On 2025-12-11 15:50:00 IST
  • எதிரிகளுக்கு எதிரான வலிமையான பரப்புரையை முன்னெடுக்க வேண்டும்.
  • குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயே முடிவெடுக்க தீர்மானம்.

தவெக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழக வெறறிக்கழகம் சார்பில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை எடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, மக்களை காக்க தவெக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும் என தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரிகளுக்கு எதிரான வலிமையான பரப்புரையை முன்னெடுக்க வேண்டும் எனவும், அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைக்கூவல் பொய்யுரைகளை தோலுரித்து எதிரிகளை தோற்கடிக்க வலிமையான பரப்புரை மேற்கொள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News