பெரியாருக்கு சாதிச்சாயமா? - மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்
- சாதி, மதத்தை ஒதுக்கி வையுங்கள்.
- விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சாதி, மத பாகுபாடு காட்டுவதில்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது.
முதல் கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சாதி, மத பிரிவினை சிந்தனை உங்களை பிரிவுபடுத்த விடாதீர்கள்.
* போதைப்பொருளை போன்று சாதி, மதத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும்.
* மாணவர்களிடம் சாதி, மத சிந்தனை இருக்கக்கூடாது.
* ஒன்றிய அரசின் யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் பெரியாருக்கு சாதிச்சாயம்.
* பெரியாருக்கே சாதிச்சாயம் பூச முயற்சிக்கிறார்கள்.
* இயற்கையின் அம்சங்களான வெயிலும் மழையும் சாதி, மதம் பார்த்தா வருகிறது.
* விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சாதி, மத பாகுபாடு காட்டுவதில்லை.
* நேர்மறை சிந்தனையுடன் மாணவர்கள் பயணிக்க வேண்டும்.
* எதுவாக இருந்தாலும் அறிவியல்பூர்வமாக மாணவர்கள் அணுக வேண்டும்.
* நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.