பதக்கம் வாங்க மறுத்த TRB ராஜா மகன் - பெருந்தன்மையாக பேசிய அண்ணாமலை
- 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது
- அண்ணாமலை, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.
இந்த போட்டிக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.
அப்போது அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அதை கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், டி.ஆர்.பி. ராஜா மகனின் இந்த செயலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, "யார் கயல் பதக்கம் வாங்க வேண்டும் என்றும் வாங்க வேண்டாம் என்றும் நினைப்பது அவரவர் விருப்பம். என் கையில் பதக்கம் வாங்கவில்லை, வாங்க மறுத்துவிட்டார் என்பது முக்கியமில்லை. டி.ஆர்.பி. ராஜாவின் மகன் எங்கிருந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த துறையில் சாதனை செய்யவேண்டும். பெரிய மனிதராக வளர வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.