இந்தியா
LIVE

Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு

Published On 2025-02-01 08:49 IST   |   Update On 2025-02-01 15:57:00 IST
2025-02-01 06:19 GMT

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள்: மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும்- நிர்மலா சீதாராமன்.

2025-02-01 06:17 GMT

பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன்.

2025-02-01 06:15 GMT

பீகார் மாநிலத்தில் உணவு பதப்படுத்துதலுக்கான தேசிய நிறுவனம் அமைக்கப்படும்- நிர்மலா சீதாராமன்.

2025-02-01 06:13 GMT

மத்திய பட்ஜெட்டில், உலகளவில் பொம்மை உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற புதிய திட்டம்.

2025-02-01 06:11 GMT

பட்டியலின பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.2 கோடி கடனுதவி வழங்கப்படும். சுமார் 5 லட்சம் பட்டியலின பெண்கள் கடனுதவி திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனர்- நிர்மலா சீதாராமன்.

2025-02-01 06:08 GMT

சிறு குறு நடுத்தர தொழில் துறைகளுடன் கடன் உத்திரவாத வரம்பு அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, சிறு தொழில் துறையினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியுடன் கூடிய கிரெடிட் கார்டு வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன்.


2025-02-01 06:07 GMT

நமது ஏற்றுமதியில் சிறு குறு நடுத்தர தொழில் துறை 45 சதவீதம் பங்கு வகிக்கிறது- நிர்மலா சீதாராமன்.

2025-02-01 06:02 GMT

கிசான் கிரெட் கார்டுகள் கடன் உதவி மூலம் 7.7 கோடி விவசாயிகள் பயன்பெற உள்ளனர்- நிர்மலா சீதாராமன்.

2025-02-01 06:01 GMT

கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு- நிதி அமைச்சர்.

2025-02-01 05:59 GMT

பருப்பு வகை தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய 6 ஆண்டு காலத்திற்கான புதிய திட்டம். துவரம், உளுத்தம் பருப்பு, சிறுதானிய தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம். அதிக மகசூல் தரும் தானியங்கள் தொடர்பாக புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News