Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
தாமரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் மகானாவுக்கு புதிய வாரியம் அமைக்கப்படுகிறது- நிர்மலா சீதாராமன்.
புதிய வேளாண் திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தானியங்கள் மீதான நமது தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் தன் தன்யா கிருஷி என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
பட்ஜெட்டில், விவசாயம், மின்சாரத் துறை, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித் துறை, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் ஆகிய 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்.
நிர்மலா சீதாராமன் தனது உரையில், " வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்றும், அரசு மேற்கொண்ட கூட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டின் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல்.
பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பட்ஜெட்டில் ஒரு நோக்கம், உள்ளடக்கம் உள்ளது - அது இரண்டும் பட்ஜெட்டின் அளவை தீர்மானிக்கிறது. பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி தளர்வு கிடைக்குமா இல்லையா என்பதைப் பார்ப்போம். மேலும், 'வரி பயங்கரவாதத்திலிருந்து' முதலீட்டாளர்கள் சிறிது தளர்வு பெறுகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். ஜிஎஸ்டியில் சில சீர்திருத்தங்களை நாங்கள் கோரியுள்ளோம். மோடி 3.0 உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது, ஜிஎஸ்டி 2.0 எப்போது வரும் என்று பார்ப்போம்."