தமிழ்நாடு செய்திகள்

GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Published On 2025-06-09 09:57 IST   |   Update On 2025-06-09 09:59:00 IST
  • கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது.
  • தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.

கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. கடந்த 7-ந்தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 980-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.71 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.118-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

04-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,720

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

08-06-2025- ஒரு கிராம் ரூ.117

07-06-2025- ஒரு கிராம் ரூ.117

06-06-2025- ஒரு கிராம் ரூ.118

05-06-2025- ஒரு கிராம் ரூ.114

04-06-2025- ஒரு கிராம் ரூ.114

Tags:    

Similar News