TN Budget 2025-26: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் - முழு விவரம்..
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்து உறவினர் பாதுகாப்பில் வளரும் 50,000 குழந்தைகள் 18 வயது வரையில் இடைநிற்றல் இன்றி பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்.
அறநிலையத் துறை அறிவிப்புகள்:
சுமார் ரூ. 7000 கோடி மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 2662 திருக்கோவில்களில் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. 777 கோவில்களில் நடைபெறும் அன்னதானம் திட்டத்தின் மூலம் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பேர் பயன் அடைகின்றனர்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படும்
தமிழ்நாட்டில் மிக அதிவேக ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை - விழுப்புரம், சென்னை - வேலூர் இடையே மிக அதிவேக ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மண்டல விரைவு போக்குவரத்து திட்டத்தின் கீழ் மணிக்கு 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ. 74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனுஷ்கோடியில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்
போக்குவரத்து துறையை மேம்படுத்த ரூ. 12964 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரெயில் இயக்க விரிவான திட்டம் தயாரிக்கப்படும். பூந்தமல்லி - போரூர் இடையே வருகிற டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 21906 கோடி நிதி ஒதுக்கப்படும்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ. 578 கோடி நிதி ஒதுக்கப்படும்
தமிழ்நாடு முழுக்க 1125 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். சென்னை, மதுரை, கோவையில் மின்சார பேருந்துகள் இக்கப்படும்.