TN Budget 2025-26: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் - முழு விவரம்..
திருவான்மியூர், உத்தண்டி உள்ளிட்ட ஆறு கடற்கரைகளுக்கு நீலக் கொடி கடற்கரை சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 50 கோடியில் கடல் வள சார் அறக்கட்டளை அமைக்கப்படும்.
வனப்பகுதி சாலைகளை மேம்படுத்த ரூ. 750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி துறைக்கு ரூ. 27,168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொளத்தூர் முதல்வர் படைப்பகம் போல் அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும்.
விண்வெளி சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ. 19 கோடி ஒதுக்கீடு
கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே ரூ. 360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
கோவை, பல்லடத்தில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான தொழில் பூங்கா அமைக்கப்படும். சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திர பூங்கா அமைக்கப்படும்.
தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க ரூ. 3915 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஓசூரில் ரூ. 400 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும். விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்