TN Budget 2025-26: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் - முழு விவரம்..
கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடற்பரிசோதனை அட்டை வழங்கப்படும்
நெருக்கடி சூழ்நிலையிலும் ரூ.2000 கோடி இழந்தாலும் இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம்- அமைச்சர் தங்கம் தென்னரசு
முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 1721 முதுநிலை, 841 பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் குறித்து அறிவிப்பு தேர்வு வாரியம் மூலம் விரைவில் வெளியிடப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு
பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறை, அறிவியல் ஆய்வகம் உள்ளிட்டவை ரூ.1000 கோடியில் மேம்படுத்தப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு
2000 பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்க ரூ. 160 கோடி ஒதுக்கீடு
தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு ரூ.56 கோடி ஒதுக்கீடு
திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடி ஒதுக்கீடு
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ரூ.600 கோடியில் விரிவுபடுத்தப்படும். நகரப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு
மூத்த குடிமக்கள் நலனுக்காக மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் ரூ.10 கோடியில் 25 அன்பு சோலை என்ற முதியோர் பகல்நேர பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை, கோவை, மதுரையில் நவீன வசதிகளுடன் மாணவிகள் விடுதி அமைக்கப்படும். விடுதியில் தலா 1000 மாணவியர் தங்கும் வகையில் ரூ.275 கோடியில் விடுதிகள் அமைக்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் மேலும் 10 இடங்களில் ரூ.800 கோடியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி அமைக்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு
மூத்த குடிமக்கள் நலனுக்காக மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் 25 அன்பு சோலை மையம் அமைக்கப்படும். அன்பு சோலை மையங்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் தங்கம் தென்னரசு