தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.-வை டார்கெட் செய்கிறார்கள்..!- 3வது வீடியோவை வெளியிட்ட முதல்வர்

Published On 2025-09-20 20:32 IST   |   Update On 2025-09-20 20:32:00 IST
  • பாஜக நேரடியாக நுழைய முடியாததால் அதிமுகவுடன் சேர்ந்து என்னென்ன செய்கிறது.
  • திமுக ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.

நம் பயணம் நீண்டது, தமிழ்நாட்டை தலைகுனிய விடாமல் இலக்கை நோக்கி விரைவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் முதலமைச்சர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை குறிவைத்து பாஜக செய்பவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் திமுகவை டார்கெட் செய்கின்றனர்.

பாஜக நேரடியாக நுழைய முடியாததால் அதிமுகவுடன் சேர்ந்து என்னென்ன செய்கிறது என கரூர் மாநாட்டிலேயே எடுத்து சொன்னேன்.

தொகுதி மறுவரையறை, கல்வி நிதி மறுப்பு, இந்தி திணிப்பு, கீழடி அறிக்கையை மறைப்பது என லிஸ்ட் நீள்கிறது.

அவர்களின் கூட்டணிக்குள் பல குழப்பம் இருந்தபோதிலும் திமுக ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.

பாஜகவை எதிர்ப்பதாக வெளியில் நிறைய பேர் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையாக எதிர்ப்பது திமுக தான்.

அனுபவம், வலிமை, கொள்கைகளோடு பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிற்கு மட்டும்தான் உள்ளது.

திமுக ஆட்சி தொடர்ந்தால் தான் தொடர்ந்து தலைநிமிர்ந்து நிற்க முடியும். ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை முன்னெடுப்பில் ஒருகோடிக்கும் அதிகமான குடும்பங்கள் திமுகவில் இணைத்துள்ளனர்.

இந்த 100 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள உயரம் என்பது ஒரு குழந்தை நடைபழகுவது போலதான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News