'நெருக்கடி தரும் அளவிற்கு அப்படி ஒன்றும் படத்தில் இல்லையே' - ஜன நாயகன் விவகாரம் குறித்து சீமான் கருத்து!
- தணிக்கை சான்றிதழை தடைசெய்யும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை
- . ஏதோ ஒரு சான்றிதழை கொடுத்து விட்டுவிடலாம்.
விஜய்யின் கடைசிப்படம் எனக்கூறப்படும், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜனநாயகன் ஜன.9ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளநிலையில், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
ஜனநாயகனுக்கு பின்பு வெளியாக உள்ள பராசக்திக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், ஜனநாயகனுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக விஜய் தரப்பினர், ரசிகர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் நெருக்கடி தரும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர்,
"தணிக்கை சான்றிதழை தடைசெய்யும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை. U/A சான்றிதழ் கொடுப்பதாக கூறினார்கள். ஏதோ ஒரு சான்றிதழை கொடுத்து விட்டுவிடலாம். அப்படத்தின் தெலுங்கு பதிப்பை பார்த்தேன். நெருக்கடி தரும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை. அப்படத்திற்கு எதற்கு இவ்வளவு செய்யவேண்டும்? சான்றிதழை இழுத்தடிப்பதற்கு படத்தில் ஒன்றும் இல்லை." என தெரிவித்துள்ளார்.