தமிழ்நாடு செய்திகள்

"உண்மையும், சட்டமும் தவறினால் நீதி அபத்தமாகும்" - திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து ஆ.ராசா கருத்து!

Published On 2026-01-07 17:56 IST   |   Update On 2026-01-07 17:56:00 IST
  • ஒரு தீர்ப்பு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்
  • நிர்வாகத் திறமையின்மையுடன் நீதித்துறையின் சோம்பல்-ஆணவம் மற்றும் கள யதார்த்தங்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமை ஆகியவை இணைகின்றன.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ஜனவரி 6 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவுக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு அளித்தநிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், ஒரு தீர்ப்பு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்; உண்மைகளை மதிப்பிடுதல் மற்றும் சட்டத்தை விளக்குதல்.

இதில் ஒன்று தவறினால், அது அபத்தமாகிவிடும்!

இரண்டுமே தவறினால், அது சங்கடமாகிவிடும்!

நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் கூறுவார், "நிர்வாகத் திறமையின்மையுடன் நீதித்துறையின் சோம்பல்-ஆணவம் மற்றும் கள யதார்த்தங்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமை ஆகியவை இணைகின்றன. அதன் விளைவு எப்படி இருக்கும்?"  முருகனுக்கு அரோகரா" எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News