திராவிடத்தை, தன் குடும்ப நலனைக் காக்கும் கவசமாக மாற்றிவிட்டது திமுக முதல் குடும்பம்- இபிஎஸ்
- திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அதிமுக.
- தங்களுக்காக எப்போதும் உழைக்கும் இயக்கமான அதிமுக-ன் புகழுக்கு மென்மேலும் வலுசேர்க்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது:-
மக்களால், மக்களுக்காக இயங்கும் ஒப்பற்ற இயக்கமாம் நம் அதிமுக-ன் துவக்க விழாவான இன்று, அண்ணா_வழி_திராவிடம் இணைய இதழின் அச்சுப் பிரதியை வெளியிட்டேன்.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகிய உயரிய விழுமியங்களால் கட்டி எழுப்பப்பட்ட திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அதிமுக.
ஆனால், நாம் உயர்த்திப் பிடித்த நம் உன்னதக் கொள்கையாம் திராவிடத்தை, தன் குடும்ப நலனைக் காக்கும் கவசமாக மாற்றிவிட்டது திமுக முதல் குடும்பம்.
தீயசக்தி திமுக-வின் தந்திரங்களை, சூதுகளைத் தோலுரித்து, உண்மையான திராவிடத்தின் மாசற்ற வாரிசு அஇஅதிமுக தான் என்ற வரலாற்று பறைசாற்றும் வகையில், @AIADMKITWINGOFL தொகுத்துள்ள இந்த மாதம் இருமுறை இணைய இதழை கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் தவறாமல் படித்து, தங்களுக்காக எப்போதும் உழைக்கும் இயக்கமான அதிமுக-ன் புகழுக்கு மென்மேலும் வலுசேர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.