தமிழ்நாடு செய்திகள்

4-வது புதிய ரெயில் வழித்தடத்தால் ரூ.157 கோடி கூடுதல் வருவாய் உருவாகும்- நயினார் நாகேந்திரன்

Published On 2025-10-23 15:02 IST   |   Update On 2025-10-23 15:02:00 IST
  • நான்காவது ரெயில் பாதை திட்டம் 757.18 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ளது.
  • பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான நான்காவது ரெயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 757.18 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ளது.

மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து புறநகர் ரெயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4-வது ரெயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்புதிய தடத்தால், ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, ரூ.157 கோடி கூடுதல் வருவாய் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து தமிழகத்தின் இரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தி வளர்ச்சிக்குத் தொடர்ந்து வித்திடும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News