தமிழ்நாடு செய்திகள்

ரூ,15 கோடியில் அமைய உள்ள சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்

Published On 2024-11-08 13:20 IST   |   Update On 2024-11-08 13:20:00 IST
  • மூன்று பகுதியாக இந்த மையம் அமைக்கப்படுகிறது.
  • செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவைகள் இடம்பெற உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. அதற்கான மாதிரிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் முழுவதுமாக பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பகுதி அளவு பொதுமக்களை அனுமதிக்கும் போது, பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பகுதி என்று மூன்று பகுதியாக இந்த மையம் அமைக்கப்படுகிறது.

கடல் பசு வடிவிலான மையம், அருங்காட்சியகம், 4டி அரங்கம், பூங்கா, திறந்தவெளி அரங்கம், உணவகம், வாகன நிறுத்துமிடம், செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவைகள் இடம்பெற உள்ளன.

448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News