தமிழ்நாடு செய்திகள்

மூழ்கும் கப்பலில் தமிழக காங்கிரஸ் பயணம்- அண்ணாமலை

Published On 2025-09-05 21:47 IST   |   Update On 2025-09-05 21:47:00 IST
  • அதிமுகவில் இபிஎஸ் போன்ற பல தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
  • முதல்வர் உண்மையிலேயே புதிதாக தொழில் முதலீடுகளை ஈர்த்தால் வரவேற்போம், அதை வெளிப்படையாக கூற வேண்டும்.

மூழ்கும் கப்பல் போன்ற கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக கூட்டணியை மூழ்கும் கப்பல் என செல்வப்பெருந்தகை விமர்சித்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை விமர்ச்சித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் குரலாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் குரல் மாறிவிட்டது.

தமிழகதத்தில் பல பிரச்சனைகள் இருக்கும்போது டிடிவி தினகரன், செங்கோட்டையன் பற்றி செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியிலேயே பல குழப்பங்கள் நிலவும் நிலையில் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை பேசுகிறார் செல்வப்பெருந்தகை.

செங்கோட்டையன் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். அதிமுகவில் இபிஎஸ் போன்ற பல தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மேக் இன் இந்தியா திட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கு புதிதாக ஸ்டிக்கர் ஒட்ட முதல்வர் வெளிநாடு பயணம்.

முதல்வர் உண்மையிலேயே புதிதாக தொழில் முதலீடுகளை ஈர்த்தால் வரவேற்போம், அதை வெளிப்படையாக கூற வேண்டும்.

மாண்புமிக்க மனிதர்களான டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News