தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் திடீர் மழை..! மேலும் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

Published On 2025-07-02 17:48 IST   |   Update On 2025-07-02 17:48:00 IST
  • சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
  • உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை செய்து வருகிறது.

சென்னை சாந்தோம், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது.

ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை செய்து வருகிறது.

உதகை - கூடலூர் சாலையில் உள்ள சோலூர் சந்திப்பு பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், சென்னை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News