தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் நிகழ்ச்சியில் விஜய் படம், த.வெ.க. கொடி காட்டிய மாணவர்கள்

Published On 2025-06-27 11:36 IST   |   Update On 2025-06-27 11:36:00 IST
  • முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
  • மாணவர்கள் தவெக கட்சியை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.

சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் விஜயின் புகைப்படத்தை மாணவர்கள் உயர்த்திக்காட்டிய சம்பவம் அரங்கேறியது.

முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவர். சோதனை முறையாக இருந்திருந்தால் த.வெ.க. கொடி கொண்டு சென்றது தடுக்கப்பட்டிருக்கும்.

இதனால், முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை தொடர்ந்து த.வெ.க கொடியை உயர்த்திக் காட்டிய மாணவர்களை உடனடியாக அங்கிருந்து பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

இதையடுத்து, கடும் சோதனை நடக்கும் இடத்தில் த.வெ.க கொடியுடன் மாணவர்கள் சென்றது எப்படி? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்த மாணவர்கள் தவெக கட்சியை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.

Tags:    

Similar News