SSI கொலை வழக்கு: கண்ண கட்டி கூட்டிட்டு போய் சுடறதுக்கு நாங்கதான் கிடச்சோமா? - கைதானவர் கதறல்
- அரசு மரியாதையுடன் எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.
- மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் /
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர். மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.
இந்நிலையில், தங்கப்பாண்டி, நீதிமன்றத்தில் இருந்து தற்போது வெளியே கூட்டி வரப்பட்டபோது "எங்கள் உயிருக்கு காவல்துறையால் ஆபத்து உள்ளது. எங்க அண்ணனை கொலை செஞ்சிட்டாங்க... கண்ண கட்டி கூட்டிட்டு போய் சுடறதுக்கு நாங்கதான் கிடச்சோமா?..." என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக தங்கபாண்டியின் சகோதரரும், கொலையில் சம்பந்தம் உள்ளவர் என சொல்லப்படுபவருமான மணிகண்டன் இன்று காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.