தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசிய நபர் - பரபரப்பு

Published On 2025-02-26 07:27 IST   |   Update On 2025-02-26 07:53:00 IST
  • த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது.
  • மர்ம நபர் செல்போனில் பேசிய படி காணப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளதை அடுத்து, விஜய் வீட்டில் மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. செருப்புடன் மர்ம பொருளை வீசிய நபர், செல்போனில் பேசிய படி அங்கிருந்து புறப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது. 

Tags:    

Similar News