தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க.வின் புதிய கொறடாவாக சிவக்குமார் தேர்வு

Published On 2025-07-04 12:55 IST   |   Update On 2025-07-04 12:55:00 IST
  • சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
  • எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.

பா.ம.க.வில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக நிறுவனர் ராமதாஸ் ஒரு அணியாகவும், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒரு குறிப்பிட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உத்தரவு பிறப்பித்து வருகிறார்.

இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பா.ம.க.வில் சட்டமன்ற கட்சி கொறடாவாக உள்ள அருளுக்கு எதிராக அன்புமணி சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து மனு அளித்தனர்.

சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலரை சந்தித்து மனு அளித்த பின்னர் வழக்கறிஞர் பாலு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அருள் நீக்கப்பட்டுள்ளார்.

பா.ம.க. சட்டசபை கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News