தமிழ்நாடு செய்திகள்

விஜயகாந்த், சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலை தான் விஜய்க்கு ஏற்படும் - செல்வப்பெருந்தகை

Published On 2025-08-26 12:25 IST   |   Update On 2025-08-26 12:25:00 IST
  • விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 10 விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் பெற்றார்.
  • சிரஞ்சீவியும் கட்சி தொடங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது த.வெ.க. குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 10 விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் பெற்றார். விருத்தாசலத்தில் தான் எம்.எல்.ஏ. ஆனார். 10 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்ற கட்சி இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதை நாம் திரும்பி பார்க்க வேண்டும். நல்ல சித்தாத்தம், நல்ல கருத்துகளை பேசினார். யாரையும் அவர் வசைபாடவில்லை.

அதேபோல் சிரஞ்சீவியும் கட்சி தொடங்கினார். 20 லட்சம் பேர் கலந்து கொண்டதாக சொன்னார்கள். கடைசியில் என்ன ஆச்சு. காங்கிரசுடன் இணைத்து விட்டார்கள். இப்போ அந்த கட்சி இருக்கிறதா என்றால் அந்த கட்சியே கிடையாது. இதேபோல் பல கட்சிகளை சொல்லலாம்"

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News