தமிழ்நாடு செய்திகள்

முடிந்தது கோடை விடுமுறை..! நாளை பள்ளிகள் திறப்பு

Published On 2025-06-01 21:00 IST   |   Update On 2025-06-01 21:00:00 IST
  • கடந்த ஏப்ரல் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.
  • ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் திட்டவட்டமா தெரிவித்தார்.

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு ஏப்ரல் 24ம் தேதி முடிவடைந்த நிலையில் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.

இதனால், விடுமுறை நாட்களை இனிதே செலவிட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால், தமிழகத்தில் உள்ள பல முக்கிய சுற்றுலா தலங்கள் பொது மக்களின் கூட்டத்தால் அலைமோதியது.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலும் அதிகமாக இருந்தது.

இதனால், பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு," பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் அவர் "அரசு- அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நாளை அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் உள்ளிட்ட பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளியில் வாழை மரம், தோரணம் என மாணவர்களை கவரும் வகையிலும், அவர்களை வரவேற்கவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News