தமிழ்நாடு செய்திகள்
கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
- புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை எதிரொலியாக புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்காலிலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.