தமிழ்நாடு செய்திகள்
த.வெ.க. மாநாடு- விஜயின் தந்தை சொன்னது இதுதான்
- பாரபத்தியில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது.
- மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று இருந்தனர்.
மதுரை பாரபத்தியில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று இருந்தனர்.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய த.வெ.க. தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. நல்லா இருந்தது மாநாடு. ரெஸ்பான்ஸ் நல்லா இருந்தது. நல்லா கூட்டம்.
என்னோட ஆசீர்வாதம் எப்பவுமே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.