தமிழ்நாடு செய்திகள்

எல்லாம் தனக்கே வேண்டும் என நினைக்கிறார் அன்புமணி: நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் - ராமதாஸ்

Published On 2025-06-12 10:24 IST   |   Update On 2025-06-12 10:24:00 IST
  • நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டும் என பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறினர்.
  • அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என்று கூறினேன்.

தைலாபுரம்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அன்புமணியை செயல் தலைவர் என்று குறிப்பிட்டு பேசினார். மேலும் தண்ணீர் விட்டே வளர்த்தோம், இப்பயிரை கண்ணீரால் காத்தோம் என பாடியிருப்பார் பாரதி என்று சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினார்.

இதையடுத்து அவர் கூறியதாவது:-

* நான் தொடங்கிய 34 அமைப்புகளை சேர்ந்த நான் நியமித்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ய வந்தனர்.

* சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

* நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டும் என பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறினர்.

* அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என்று கூறினேன்.

* ஜி.கே.மணி, சிவபிரகாசம் ஆகிய இருவரையும் தூது அனுப்பினேன். இருவரையும் சந்திக்க அன்புமணி சம்மதிக்கவில்லை.

* என்னை நம்ப முடியாது என அன்புமணி கூறினார்.

* கொள்ளு பேரன், பேத்திகளோடு கொஞ்சி விளையாடுங்கள் என என்னிடம் கூறினர்.

* நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று முடிவுக்கு வந்து செய்தியாளர்களை சந்திக்கிறேன்.

* எல்லாம் தனக்கே வேண்டும் என எண்ணுகிறார் அன்புமணி.

* தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களை நான் சந்தித்து கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார். 

Tags:    

Similar News