தமிழ்நாடு செய்திகள்

பதவிகளுக்கு ஆசைப்படாதவன் நான்- ராமதாஸ்

Published On 2025-09-11 08:03 IST   |   Update On 2025-09-11 08:03:00 IST
  • அரசாங்கம் நீங்கள் நல்லா குடியுங்கள், அதை வைத்துதான் ரூ.1,000 கொடுக்க முடியும் என சொல்கிறது.
  • எல்லாரும் குடிங்க, குடிங்க என்று சொல்கிறார்கள், ஆனால் ராமதாஸ் தான் படிங்க, படிங்க என சொல்கிறேன்.

செய்யூர்:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மீண்டும் கிராமங்களை நோக்கி மருத்துவர் அய்யா என்கிற தலைப்பில் நேற்று முதல் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் நடைபெற்ற கிராம அளவிலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

அரசாங்கம் நீங்கள் நல்லா குடியுங்கள், அதை வைத்துதான் ரூ.1,000 கொடுக்க முடியும் என சொல்கிறது.

ஆனால், நாங்கள் ஒரு சொட்டு மது இருக்கக்கூடாது என்று பேசி வருகிறோம், இளம் தலைமுறையினர் கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர். கஞ்சாவுக்கு அடிமையானால் மீள முடியாது.

எல்லாரும் குடிங்க, குடிங்க என்று சொல்கிறார்கள், ஆனால் ராமதாஸ் தான் படிங்க, படிங்க என சொல்கிறேன்.

உங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள், அதற்காக தான் நான் பல போராட்டங்களை நடத்தி உள்ளேன். நான் எந்த பதவிக்கும் போக விரும்பவில்லை, என் வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் போக மாட்டேன் என சத்தியம் செய்து மற்றவர்களை எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு அனுப்பி அழகு பார்த்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், செங்கல்பட்டு மாவட்டச்செயலாளர் சாந்த மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News