தமிழ்நாடு செய்திகள்

என்னை நடைபிணமாக்கி என் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் செய்ய போகிறார்கள் - ராமதாஸ்

Published On 2025-06-12 10:51 IST   |   Update On 2025-06-12 10:51:00 IST
  • அய்யாவுக்கு பிறகே அன்புமணி.
  • அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.

தைலாபுரம்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தேவையற்ற பொய்களை கூறி அன்புமணி மாவட்ட செயலாளர்களை மிரட்டினார்.

* என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிற அளவுக்கு அன்புமணியின் செயல்பாடுகள் இருந்தன, இருக்கின்றன.

* அய்யாவுக்கு பிறகே அன்புமணி.

* என்னை நடைபிணமாக்கி என் பெயரில் நாடுமுழுவதும் நடைபயணம் செய்ய போகிறார்கள்.

* அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.

* பா.ம.க. தொண்டர்களை நான் வழிகாட்டிகளாக நினைக்கிறேன்.

* இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?

இவ்வாறு ராமதாஸ் கூறினார். 

Tags:    

Similar News