தமிழ்நாடு செய்திகள்

குலசாமி என கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் - ராமதாஸ் ஆதங்கம்

Published On 2025-06-12 10:37 IST   |   Update On 2025-06-12 11:30:00 IST
  • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.
  • தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.

தைலாபுரம்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அன்புமணி மீதான ஆதங்கத்துடன் பேசினார். மேலும் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

ராமதாஸ் கூறியதாவது:-

* ஒத்து போயிருந்தால் ஓரிரு ஆண்டுகளில் நானே முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன்.

* இன்னும் ஓரிரு ஆண்டுகள் பாமகவுக்கு தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா என கேட்பதற்கு அவமானமாக உள்ளது.

* அன்புமணி பா.ம.க. தலைவராக்கப்பட்ட போது ஆனந்த கண்ணீட் விட்டேன்.

* என்னை மானபங்கம் செய்துவிட்டார் அன்புமணி.

* தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.

* தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.

* குலசாமி என கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் என கூறினார். 

Tags:    

Similar News