தமிழ்நாடு செய்திகள்

கனமழை எதிரொலியால் இன்று நடைபெற இருந்த பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து- ராமதாஸ்

Published On 2025-11-18 09:42 IST   |   Update On 2025-11-18 09:42:00 IST
  • நாளை இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய , பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
  • தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்த ராமதாஸ் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 15-ந்தேதி வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தனது தலைமையிலான பா.ம.க.வுக்கு அங்கீகாரம் பெற சுப்ரீம் கோர்ட்டை நாடுவது குறித்து நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து இன்று (18-ந்தேதி) பா.ம.க. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் நாளை (19-ந்தேதி) இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய , பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்த ராமதாஸ் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த இரு கூட்டங்களும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக பா.ம.க. தலைமை நிலையம் அறிவித்துள்ளது.

ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News