தமிழ்நாடு செய்திகள்
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- ஆலோசனையில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் மழை நிலவரம், கனமழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பல்வேறு மாவட்டங்களில் மழை நிலவரம், மழை பாதிப்புகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.