தமிழ்நாடு செய்திகள்

3 நாள் சுற்றுப்பயணம்: ஓசூரில் தே.மு.தி.க. பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை

Published On 2025-08-08 12:46 IST   |   Update On 2025-08-08 12:46:00 IST
  • விஜயகாந்த் உருவப்படத்திற்கு பிரேமலதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  • மாலை 4 மணி அளவில் உத்தனப்பள்ளியில் மக்களை சந்தித்து பேசுகிறார்.

ஓசூர்:

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் தி.மு.க., அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி, பா.ம.க. அன்புமணி ராமதாஸ் என ஆகிய கட்சியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.

அந்த வரிசையில், தே.மு.தி.க.வும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற சுற்றுபயணம் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் தின்னூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

இதில், பொருளாளர் எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, விஜயகாந்த் உருவப்படத்திற்கு பிரேமலதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை முடித்து விட்டு அவர் மாலை 4 மணி அளவில் உத்தனப்பள்ளியில் மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் அவர் ராயக்கோட்டை, சூளகிரி, நெடுசாலை, வேப்பனப்பள்ளி ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் அவர் இரவு தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் தங்குகிறார். இதையடுத்து நாளை மாலை 4 மணி அளவில் பென்னாகரத்தில் மக்களை சந்தித்து பிரேமலதா பேசுகிறார். மறுநாள் மாலை 4 மணி அளவில் அவர் தருமபுரியில் மக்களை சந்தித்து பேசுகிறார்.

பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News