தமிழ்நாடு செய்திகள்

நல்ல செய்தி வரும்... ராமதாஸ்-அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது - பா.ம.க. முன்னாள் தலைவர்

Published On 2025-06-06 14:50 IST   |   Update On 2025-06-06 14:50:00 IST
  • ஆகஸ்ட் மாதம் நடக்கும் மகளிர் மாநாட்டு பணிகளை கவனிக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
  • ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரை சந்தித்துள்ளார்.

திண்டிவனம்:

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. முன்னாள் தலைவர் பேராசிரியர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்-அன்புமணி இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. நல்ல செய்தி வரும் என ராமதாஸ் கூறியது சமாதானம் என கூறலாம்.

ஆகஸ்ட் மாதம் நடக்கும் மகளிர் மாநாட்டு பணிகளை கவனிக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரை சந்தித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News