தமிழ்நாடு செய்திகள்

இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு... தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு நயினார் நாகேந்திரன் கடிதம்

Published On 2025-07-01 10:46 IST   |   Update On 2025-07-01 10:46:00 IST
  • இளைஞர் அஜித்குமார் மரண வழக்கை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
  • கடந்த 5 ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்கள் தொடர்பாக தமிழக அரசியடம் அறிக்கை கேட்க வேண்டும்.

சென்னை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும், அஜித்குமார் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இளைஞர் அஜித்குமார் மரண வழக்கை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்க வேண்டும். போலீஸ் விசாரணையில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 



Tags:    

Similar News