சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது
- அவருக்கு மதுரையைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
- அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(வயது 48). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் பிரான்சிஸ் தனது கள்ளக்காதலி மற்றும் கள்ளக்காதலியின் மகள் ஆகியோருடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாஸ்கோ நகரில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
அப்போது கள்ளக்காதலியின் 16 வயது மகளை பிரான்சிஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரான்சிசை கைது செய்தனர்.