தமிழ்நாடு செய்திகள்

அரியலூர் அரசு மருத்துவமனை கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து தலையை அமுக்கி கொலை செய்த கொடூர தாய்

Published On 2025-05-22 14:02 IST   |   Update On 2025-05-22 14:02:00 IST
  • கழிவறைக்குள் இருந்து குழந்தையின் குரல் கேட்டு அங்கு நின்றவர்கள் திரண்டனர்.
  • மருத்துவமனை போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கண்டிராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் லாரா.

நிறைமாத கர்ப்பிணியான இவர் இன்று காலை அரியலூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக வந்தார்.

அரசு மருத்துவமனை வார்டு பகுதிக்கு வந்ததும் லாராவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்த கழிவறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. உடனே அவர் குழந்தையை கழிவறைக்குள் வைத்து அமுக்கியுள்ளார்.

கழிவறைக்குள் இருந்து குழந்தையின் குரல் கேட்டு அங்கு நின்றவர்கள் திரண்டனர்.

அங்கு கதவை திறந்ததும் உள்ளே கழிவறை குழிக்குள் இறந்த நிலையில் குழந்தை கிடந்தது. உடனே லாரா அங்கிருந்து தப்ப முயன்றார். இதையடுத்து அப்பகுதியினர் அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவமனை போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தையை லாரா துடிக்க துடிக்க கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக லாராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை லாரா கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News