தமிழ்நாடு செய்திகள்
களவாடப்பட்ட ஒவ்வொரு வாக்கின் கனத்தையும் பீகார் மண்ணில் உணர முடிகிறது- மு.க.ஸ்டாலின்
- லாலு பிரசாத்தின் மண் கண்ணில் தீயுடன் என்னை வரவேற்கிறது.
- மக்களின் வலியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத ஆற்றலாக மாற்றும் வாக்கு அதிகாரப் பயணத்தில் நானும் இணைந்தேன்.
சென்னை:
பீகார் மாநிலத்தில் வாக்கு அதிகாரப் பயணத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ள தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
பீகார் வந்தடைந்தேன். லாலு பிரசாத்தின் மண் கண்ணில் தீயுடன் என்னை வரவேற்கிறது. களவாடப்பட்ட ஒவ்வொரு வாக்கின் கனத்தையும் மண்ணில் உணர முடிகிறது.
அன்பு இளவல்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருடன், மக்களின் வலியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத ஆற்றலாக மாற்றும் வாக்கு அதிகாரப் பயணத்தில் நானும் இணைந்தேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.