தமிழ்நாடு செய்திகள்

படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதே தி.மு.க. அரசின் நோக்கம் - மு.க.ஸ்டாலின்

Published On 2025-06-27 11:37 IST   |   Update On 2025-06-27 11:37:00 IST
  • எழுத்தாளர்களை தமிழ் சமூகம் என்றும் கொண்டாட தவறியதே இல்லை.
  • 36 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லா ல்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்" இன்றும் மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

* உலகளவிலான பல்கலைக்கழகங்கள் ஜே.என்.யு உடன் பணியாற்ற விரும்புகின்றனர்.

* ஜவஹர்லால் நேரு பல்கலையில் தமிழ் இருக்கையை அமைத்தவர் கலைஞர்.

* படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான் தி.மு.க. அரசின் நோக்கம்.

* எழுத்தாளர்களை தமிழ் சமூகம் என்றும் கொண்டாட தவறியதே இல்லை.

* எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்.

* 36 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

* சாகித்ய அகாடமி விருது பெறுவோருக்கு வீடு வழங்க வேண்டும் என முடிவு செய்து கனவு இல்லம் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.

* சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 பேருக்கு தலா ரூ.1 கோடியில் வீடு வழங்கப்பட்டது.

* 15 தமிழ் அறிஞர்களுக்கு கலைஞரின் கனவு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

* நூல் உரிமைத்தொகை இல்லாமல் கலைஞரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News