தமிழ்நாடு செய்திகள்
சென்னை மெரினாவில் Rope Way Car அமைக்கப்படும்- மேயர் பிரியா
- பொதுமக்கள் பங்கேற்கும் சென்னை திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அறிமுகம் செய்யப்படும்.
- சென்னை பக்கிங்காம் கால்வாய் வழித்தடத்தில் நகர்ப்புற பசுமையாக்கள் திட்டம் ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும்.
சென்னை மெரிாவில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் வே கார் வழித்தடம் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர்,"சென்னை மாநகராட்சி பூங்காக்களில் மரங்கள் மூலம் பிராணவாயு உற்பத்தி செய்ய ஏதுவாக பசுமை சென்னை திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
பொதுமக்கள் பங்கேற்கும் சென்னை திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அறிமுகம் செய்யப்படும்.
சென்னை பக்கிங்காம் கால்வாய் வழித்தடத்தில் நகர்ப்புற பசுமையாக்கள் திட்டம் ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும்.
சென்னையில் அண்ணா நகர், தி.நகர், நுஞ்கம்பாக்கம், அடையாறு போன்ற இடங்களில் மின் வாகன மின்னேற்ற நிலையம் அமைக்கப்படும்" என்றார்.