தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் பதவியா? ஜாமினா? எது வேண்டும்- செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி

Published On 2025-04-23 16:09 IST   |   Update On 2025-04-23 16:09:00 IST
  • சட்டப்பூர்வமாக ஜாமின் கிடைத்த பிறகு தான் அமைச்சராக பதவியேற்றதாக செந்தில் பாலாஜி தரப்பு வாதம்.
  • செந்தில் பாலாஜி அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும் ?

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சட்டப்பூர்வமாக ஜாமின் கிடைத்த பிறகு தான் அமைச்சராக பதவியேற்றதாக செந்தில் பாலாஜி தரப்பு வாதம் செய்துள்ளது.

ஜாமின் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

செந்தில் பாலாஜி அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும் ? எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி சமரசம் செய்த விதம் குறித்து கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைப்பார் என்ற அச்சம் இருந்தால் வழக்கு விசாரணையை வேற மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

மேலும், மெரிட் அடிப்படையில் நாங்கள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கவில்லை, அரசியல் சாசன பிரிவுஐ மீறியதன் காரணமாகவே ஜாமின் வழங்கப்பட்டது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News