தமிழிசைக்கு மீடியா மேனியா.. சீமான் வசைபாடாத ஆள் யாராவது இருக்கிறார்களா? - சேகர்பாபு
- ஏதாவது பேசிக்கொண்டு தான் இருப்பார்.
- அவருக்கு தினந்தோறும் தான் மட்டும் தான் புத்தன். மற்றவர்கள் அத்தனை பேரும்...
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், தமிழகத்தில் சாலைகள், உள்கட்டமைப்பு சரியில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சேகர்பாபு, தமிழிசை பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர். அங்கு தள்ளாடின்னே இருந்தவர்களை பார்த்துட்டு கவர்னராக வந்தவங்க. அதனால அவங்க எது பார்த்தாலும் தள்ளாட்டமாவே தெரிகிறது.
அன்பு சகோதரிக்கு மீடியா மேனியா. ஏதாவது பேசிக்கொண்டு தான் இருப்பார். நீங்கள் நின்று கொண்டு இருக்கும் இந்த சாலை எப்படி தரமானதாக இருக்கிறது என்று நீங்கள் அவரிடம் அடுத்த முறை கேள்வி கேளுங்கள் என்றார்.
இதனிடையே, திமுக துரோகி, காங்கிரஸ் எதிரின்னு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, அவர் வசைபாடாத ஆள் யாராவது இருந்தால் அடையாளம் காட்டுங்கள். அவருக்கு தினந்தோறும் தான் மட்டும் தான் புத்தன். மற்றவர்கள் அத்தனை பேரும்... என் வாயால் சொல்லக்கூடாது. அவர் வசைபாடா ஆட்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம் என்றார்.